An Unofficial Portal for all things related to upcoming movies of Rajini
Random header image... Refresh for more!

Rajini speaks!

Amid wide expectations, Super Star Rajini participated in the protest organized by the Tamil film artistes association in Chennai today.

Rajini in Chennai Fast

He also spoke during the protest. He strongly condemned the violent attacks against tamils in Karnataka. He said that the political parties are playing a dangerous game for short term political mileage without giving due regard to the long term effects. His complete speech in tamil is below:

மிகவும் அதிகமாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம், குறைவாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம். இங்கே பேசியவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருவதாக உள்ளன.

குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும என ஒதுக்கப்பட்டது. தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள தமிழகத்தை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்… உதைக்க வேண்டாமா, இதை எதிர்ப்பவர்களை.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. அரசு, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா… மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்… யார் சொன்னால் கேட்பார்கள்… புரியவில்லை.
என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்… நாராயணகவுடாவை எல்லாம் விடுங்கள்.

கொஞ்சம் பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம். கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர் (எதியூரப்பா). ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் வித்த்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி (பாஜக) சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

காரணம் அங்கே விரைவில் வரப்போகிற சட்டசபைத் தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள். மக்கள் என்ன முட்டாள்களா.. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா…?

எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளுக்குச் சமமானவர்கள் மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. உண்மையாகப் பேச வேண்டும். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்ள வேண்டாம்.

மக்களுக்கு ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவ கெளவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா போன்றவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்… அப்புறம் நீங்கள் இருக்க மாட்டீர்கள். அழிந்து போவீர்கள்.

இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய இந்த பிரச்னைக்கு இப்ப‌ோது தீர்வு காணாவிட்டால், பிறகு கோடாலி கொண்டும் வெட்டி தீர்வு காண முடியாது.

இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது மிகச் சாதாரண மக்கள் தான். இதனால் உண்மையைப் பேசுங்கள், அரசியல் லாபத்துக்காக எதையும் பேசாதீர்கள்.

Along with Rajini, many leading actors and actresses participated in this one day token fast. Some prominent personalities include Nadigar Sangam chief Sarath Kumar, DMDK chief Vijayakanth, Sathyaraj, Vijay, Ajith, Dhanush, Trisha, Nayanatara, Sneha, and Manorama.

0 comments

There are no comments yet...

Kick things off by filling out the form below.

Leave a Comment

  • Recent Comments

  • Stay in touch

    Add to Google Reader or Homepage

     Subscribe in a reader

    Enter your email address:

    Delivered by FeedBurner